இலங்கை
இலங்கையில் கடந்த சில வருடங்களில் நாய்கள் தவிர்ந்த ஏனைய விலங்குகள் கடித்து உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.
நாய்க்கடியால் ஏற்படும் ரேபிஸ் (நீர் வெறுப்பு நோய் அல்லது வெறிநோய்) பற்றி அறியாமையே மரணங்கள் அதிகரிப்பதற்கு வழிவகுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனை அமைச்சின் வெறிநோய் தடுப்புப் பிரிவின் வைத்திய அதிகாரி வைத்தியர் ஹேஷான் குருகே தெரிவித்துள்ளனர்.
சுகாதார மேம்பாட்டு பணியகத்தில் நடைபெற்ற முன்னேற்ற கலந்துரையாடலில் கலந்து கொண்ட வைத்திய அதிகாரி ஹேஷான் குருகே இந்த கருத்துக்களை வெளியிட்டுள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில்...
கடந்த சில வருடங்களில் நாய்கள் அல்லாத விலங்குகளால் கூட மனித உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளதை ஆய்வு செய்யும் போது வெறிநாய்க்கடிக்கு ஆளானவர்களின் எண்ணிக்கை சற்று அதிகரித்துள்ளது.
சில சமயங்களில் அந்த மிருகம் எது என்று கூட தெரிந்து கொள்ள முடியாது.
குடிப்பழக்கத்திற்கு அடிமையான பலர், நெடுஞ்சாலையோரம் உள்ள கட்டிடங்களுக்கு அருகில் தூங்கிவிட்டு, காலையில் எழுந்ததும், சில விலங்குகள் அவர்களை கடித்தோ, தாக்கியோ இருக்கும். அவர்கள் அதனை கண்டுகொள்வதில்லை.
சிறிது நேரம் கழித்து, ஹைட்ரோஃபோபியா (Hydrophobia) அதாவது அறிகுறிகள் அந்த மக்களில் தோன்றும். கடந்த இரண்டு அல்லது மூன்று வருடங்களில் இதுபோன்ற பல சம்பவங்கள் பதிவாகியுள்ளன.
ஏதேனும் விலங்கு கடித்தால் அல்லது தாக்கினால் முறையான முதலுதவி அளிக்கப்பட வேண்டும்.
முதலில் காயத்தினை தண்ணீர் மற்றும் சோப்பினால் குறைந்தது பத்து நிமிடங்களாவது கழுவ வேண்டும் வீட்டில் ஆல்கஹால் இருந்தால் பெடாடின் போன்ற அயடின் கரைசல், அறுவைசிகிச்சை ஸ்பிரிட் அல்லது ஹைட்ரஜன் பெராக்சைடு போன்ற கிருமி நாசினிகள் இருந்தால் அதனால் கழுவலாம்.
பின்னர் வைத்தியசாலைக்கு செல்லுங்கள். இதைச் செய்தால் இலங்கையில் இருந்து அனைவரும் ஹைட்ரோபோபியாவை ஒழிக்க முடியும் என தெரிவித்துள்ளார்.
இலங்கையில் விலங்குகள் கடித்து உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு...!!

உங்கள் விருப்பத்துக்குரிய மேலதிக செய்திகள்
Doolan Brothers Bar & Eatery
விளம்பரம்
விளம்பரம்
Cosmetic Doctor
விளம்பரம்
விளம்பரம்
Orb 360 Innovate, Evolve & Prosper
விளம்பரம்
விளம்பரம்