வெள்ளப்பெருக்கு காரணமாக Gore மாவட்டத்தில் அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.
Southland இல் பெய்துவரும் மழையினால் பரவலான வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
இதனிடையே கனமழை பெய்து வருவதால் Gore மாவட்ட கவுன்சில், மணல் மூட்டைகளை நிரப்ப உதவுமாறு சமூகத்திடம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
MetService இப்பகுதிக்கு இன்று மாலை வரை கனமழை எச்சரிக்கைகளை விடுத்துள்ளது.
ஐந்து மணி வரை ஒரு மணி நேரத்திற்கு 25 மில்லிமீட்டர் மழை பெய்யும் என கூறப்படுகிறது.
ஐந்து உள்ளூர் சாலைகள் வெள்ளம் காரணமாக மூடப்பட்டுள்ளன.
Dunrobin இல் உள்ள Aparima நதி,
Waterloo சாலையில் உள்ள Hamilton Burn மற்றும் Sunnyside இல் உள்ள Waiau நதி ஆகியவற்றிற்கு வெள்ள எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக Southland பிராந்திய கவுன்சில் தெரிவித்துள்ளது.
நேப்பியரில் பிரச்சாரத்தில் ஈடுபட்ட பேசிய பிரதமர் கிறிஸ் ஹிப்கின்ஸ், Southland இல் ஏற்பட்ட வெள்ளம் குறித்து தனக்குத் தெரியும் என்றும் மேலும் புதுப்பிப்புகளை NEMA வழங்கும் என்றும் கூறினார்.
அந்தப் பகுதியில் உள்ள மக்களை வழிகாட்டுதலைப் பின்பற்றவும், வானிலை அறிக்கையைக் கண்காணிக்கவும், உள்ளூர் தேசிய அவசரகால பதிலளிப்பவர்களின் வழிகாட்டுதலைப் பின்பற்றவும் நான் ஊக்குவிக்கிறேன் என்று அவர் கூறினார்.
நகரின் குயின்ஸ் பூங்காவில் மரங்கள் விழுந்ததால் நடைபாதைகள் மூடப்பட்டுள்ளதாக Invercargill நகர சபை தெரிவித்துள்ளது.
செய்தி நிருபர் - புகழ்