Point Chevalier பகுதியில் இடம்பெற்ற கொள்ளைச் சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார் நபர் ஒருவரை கைது செய்துள்ளனர்.
Point Chevalier, Carrington வீதியிலுள்ள Wapiti Sports Bar இல் மேற்கொள்ளப்பட்ட குறித்த கொள்ளை சம்பவம் தொடர்பில் 26 வயதுடைய நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சனிக்கிழமை அதிகாலை 2 மணியளவில் சுத்தியல் மற்றும் துப்பாக்கி ஏந்திய பலர் பாரில் இருந்த ஊழியர்களை மிரட்டி பணம் பறித்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.
ஆக்லாந்து நகர சிஐபியின் துப்பறியும் மூத்த சார்ஜென்ட் ஆஷ் மேத்யூஸ் கூறுகையில், திங்கள்கிழமை இரவு Manurewa வில் அந்த நபர் கைது செய்யப்பட்டதாக அவர் தெரிவித்தார்.
மேலும் கைது செய்யப்பட்ட நபர் கிரிப்ஸ் கும்பலைச் சேர்ந்தவர் என்று அவர் கூறினார்.
இந்நிலையில் கொள்ளைச் சம்பவங்கள் தொடர்பாக குற்றம் சாட்டப்பட்ட 26 வயது நபர் செவ்வாய்கிழமை ஆக்லாந்து மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
செய்தி நிருபர் - புகழ்