Breaking News

சமூகவலைதளங்களில் ஆபாச காணொளிகளை பரப்பினால் கடும் நடவடிக்கை - இலங்கை அரசு அதிரடி..!

சமூகவலைதளங்களில் ஆபாச காணொளிகளை பரப்பினால் கடும் நடவடிக்கை - இலங்கை அரசு அதிரடி..!

இலங்கை

இலங்கையில் நிர்வாண படங்கள் மற்றும் காணொளிகளை சமூக வலைத்தளங்களில் பரப்புவோருக்கு எதிராக கடுமையான தண்டனை வழங்கக்கூடிய வகையில் எதிர்காலத்தில் சட்டங்கள் தயாரிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்த சட்டங்கள் அடங்கிய சட்டமூலம் குறித்த அமைச்சரவைப் பத்திரம், பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸினால் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது.;

மேலும், முதன்முறையாக இதுபோன்ற குற்றத்திற்காக சிக்கும் நபருக்கு 5 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை அல்லது 5 லட்சம் ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படலாம் என தெரிவிக்கப்படுகிறது.