Breaking News

விஜய் ஆண்டனி மகள் உயிரிழந்த செய்தியை அறிந்து ஓடோடி வந்த சந்தானம்...!!

விஜய் ஆண்டனி மகள் உயிரிழந்த செய்தியை அறிந்து ஓடோடி வந்த சந்தானம்...!!

நடிகர் விஜய் ஆண்டனியின் 16 வயதான மூத்த மகள் இன்று அதிகாலை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது திரையுலகை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. பல சினிமா பிரபலங்களும் விஜய் ஆண்டனியை தொடர்பு கொண்டு இரங்கல் தெரிவித்து வருகின்றனர். பிரேத பரிசோதனை செய்யப்பட்ட பின்னர் அவரது உடல் இன்று மதியத்துக்கு பின்னர் வீட்டுக்கு கொண்டு வரப்படும் என்றும் இன்று மாலையே இறுதிச்சடங்கு நடைபெறும் என தகவல்கள் வெளியாகி உள்ளன.

இந்நிலையில் விஜய் ஆண்டனியின் மகள் தற்கொலை செய்து மரணித்த சம்பவத்தை கேள்விப் பட்டதும் நடிகர் சந்தானம் உடனடியாக விஜய் ஆண்டனி வீட்டிற்கு விரைந்த காட்சிகள் தற்போது வெளியாகி உள்ளன. விஜய்யின் வேலாயுதம் படத்தில் சந்தானம் நடித்த நிலையில், அந்த படத்திற்கு விஜய் ஆண்டனி இசையமைத்து இருந்தார். மேலும், சந்தானம் நடித்த நம்பியார் படத்துக்கும் விஜய் ஆண்டனி தான் இசையமைத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. பல ஆண்டுகளாக குடும்ப நண்பராகவே இருந்து வந்த சந்தானம் விஜய் ஆண்டனியின் மகள் மரணம் குறித்து அறிந்ததும் அவரது வீட்டுக்குச் சென்று இரங்கல் தெரிவித்துள்ளார்.