Breaking News

மலேசியாவில் நடைபெற்ற உலகளாவிய உயரம் பாய்தல் போட்டியில் இலங்கை ஆசிரியர் முதலிடம்...!!

மலேசியாவில் நடைபெற்ற உலகளாவிய உயரம் பாய்தல் போட்டியில் இலங்கை ஆசிரியர் முதலிடம்...!!

மலேசியாவில் நடைபெற்ற 40 வயதின் மேல், உலகளாவிய உயரம் பாய்தல் போட்டியில் இலங்கையின் புத்தளம் ஷாஹிரா தேசிய பாடசாலையின் ஆசிரியர் ஆசிரியர் ஹுமாயூன் முதலிடம் பெற்று தங்கப் பதக்கத்தை வென்றுள்ளார்.

மேலும் ஆசிரியர் MFM துபைல் அவர்கள் உலகளாவிய 200மீட்டர் ஓட்டபோட்டியில் இரண்டாமிடம் பெற்றுள்ளார்.

ஆசிரியர் ஹுமாயூன் மற்றும் துபைல் ஆகியோர் புத்தளம் சாஹிரா தேசிய பாடசாலையின் ஆசிரியர்கள் மற்றும் இருவருமே சகோதரர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

M. F. M. Humayoon ஆசிரியர் ஒரு சிறந்த உடற்கல்வி ஆசிரியர் ஆவார். விளையாட்டுத் துறையில் குறிப்பாக சாஹிரா கல்லூரியின் உதைப்பந்தாட்டத் துறையில் தனக்கென தனியான இடத்தை பிடித்தவர்.

சாஹிரா கல்லூரியின் புகழும் பெருமிதமும் தேசிய மட்டத்தில் உதைப்பந்தாட்டத்தை அடிப்படையாகக் கொண்டதாகும்.

அவர் மலேசியாவில் பெற்றுக் கொண்ட வெற்றி இன்று சர்வதேச அரங்கில் சாஹிரா பாடசாலையின் வெற்றியாக புத்தளத்தின் வெற்றியாக பார்க்கப்படுகிறது.