Breaking News

வடக்கு Canterbury இல் காட்டுத் தீ...!

வடக்கு Canterbury இல் காட்டுத் தீ...!

வடக்கு Canterbury இல் உள்ள Culverden என்ற‌ இடத்தில் ஏற்பட்ட காட்டுத் தீ தற்போது கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.

இன்று அதிகாலை 5 மணிக்கு முன்னதாக Pahau Downs இல் இந்த காட்டுத் தீ ஏற்பட்டுள்ளது.

இதனையடுத்து தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு வரவழைக்கப்பட்டனர்.

ஒரு பள்ளத்தாக்கில் சுமார் 150 மீற்றர் நீளத்திற்கு தீ பரவியதாக செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.

அப்பகுதியில் வீடுகள் உள்ளன, ஆனால் குடியிருப்பாளர்கள் யாரும் வெளியேற்றப்படவில்லை.

தீ தற்போது கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

செய்தி நிருபர் - புகழ்