சனிக்கிழமை இரவு Hastings மாவட்டத்தில் சாலை இடைத்தடுப்பில் வாகனம் மோதுண்டு விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்தார்.
இரவு 7.30 மணியளவில் Pakowhai சாலை மற்றும் Brookfields சாலை சந்திப்பில் இந்த விபத்து இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவ இடத்திலேயே ஒருவர் உயிரிழந்தார்.
மற்றொருவர் மிதமான காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
தீவிர விபத்து பிரிவும் சம்பவ இடத்தில் விசாரணைகளை மேற்கொண்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
விபத்துக்கான காரணம் குறித்து விசாரணைகள் நடைபெற்று வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.
செய்தி நிருபர் - புகழ்