Whakatāne இல் கடையொன்றில் கொள்ளையில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் கத்தி ஒன்றையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

மூத்த சார்ஜென்ட் டிரிஸ்டன் முர்ரே கூறுகையில், புதன்கிழமை மாலை 6 மணிக்கு சற்று முன் கடையொன்றினுள் நுழைந்த குறித்த பெண் அங்கிருந்தவர்களை அச்சுறுத்தி கொள்ளையில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.
 
இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் அங்கு கத்தி ஒன்றை கைப்பற்றியதுடன் 41 வயது பெண்ணை கைது செய்ததாக முர்ரே கூறினார்.

இந்த சம்பவத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என அவர் தெரிவித்தார்.

இதனிடையே செப்டம்பர் 19, செவ்வாய்க் கிழமை, அந்தப் பெண் Whakatāne மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

செய்தி நிருபர் - புகழ்