சார்லட் தமிழ்ச் சங்கத்தின் கைப்பந்து மற்றும் வீச்சுப்பந்து போட்டி முதல் முறையாக சார்லட் மாநகரில் கடந்த சனிக்கிழமை செப்டம்பர் 9 ஆம் தேதி அன்று சிறப்பாக நடைபெற்றது
இந்தப் போட்டியில் இருபதுக்கும் மேற்பட்ட அணிகள் மிக உற்சாகமாக கலந்துகொன்றனர்.
பெண்களுக்காக நடந்த வீச்சுப்பந்து போட்டியின் இறுதிச் சுற்று போட்டிக்கு ராலே மாநகரைச் சார்ந்த இரு அணிகள், ட்ரையாங்கில் டொர்னாடோஸ் மற்றும் ஆர்டிபி ஃப்யூஷன்ஸ் தகுதி பெற்றனர். இறுதி போட்டியில் ஆர்டிபி ஃப்யூஷன்ஸ் அணியினர் வெற்றி பெற்றனர்.
ஆண்களுக்கான முதலாவது பிரிவில் டைட்டன்ஸ் அணியினர் முதல் இடத்தையும் "கான்கார்ட் ரூக்கிஸ்" அணியினர் இரண்டாம் இடத்தையும் வென்றனர்.
இரண்டாவது பிரிவில் "தி அதர்ஸ்" அணியினர் முதல் இடத்தையும் "வாரியர் சூப்பர் கிங்ஸ்" அணியினர் இரண்டாம் இடத்தையும் வென்றனர்.
மூன்றாவது பிரிவில் நடந்த இறுதிச் சுற்று போட்டியில் "எஸ்.டி. வூஸ்" அணியினர் முதல் இடத்தையும் "நெருப்பு" அணியினர் இரண்டாம் இடத்தையும் பிடித்து கோப்பைகளை வென்றனர்.
போட்டிகளை மிகச் சிறப்பாக ஒருங்கிணைத்த திரு ஆண்ட்ரு கணிகைராஜ், திரு சென்னியப்பன் ஷண்முகம், திரு முருகன் நடேசன், திருமிகு ரூபா ஜெய்சங்கர், திரு. தருண் சிங்காரவடிவேலு , திரு. இளங்கோ குப்புசாமி ஆகியோர்க்கு போட்டியின் நிறைவு உரையில் செயற்குழு உறுப்பினர் திரு. விக்னேஷ் மீனாட்சிசுந்தரம் சார்லட் தமிழ்ச் சங்கம் சார்பாக மனமார்ந்த நன்றியும் பாராட்டுகளையும் தெரிவித்துக் கொண்டார்.
செய்தி குறிப்பிலிருந்து - சென்னியப்பன் சண்முகம்
இணைச் செயலாளர்
சார்லட் தமிழ்ச் சங்க செயற்குழு
எமது நிருபர் - ஷீலா ரமணன்