இந்தியா: தமிழ்நாடு

இன்றையதினம் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல் திருமாவளவன் செய்தியாளர்களை சந்தித்தார். இதன்போது அவரிடம், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையின் நடைப்பயணம் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.

இந்த கேள்விக்கு பதிலளித்த அவர், "நீங்கள் இந்த கேள்வி கேட்ட போதுதான், அண்ணாமலை நடைப்பயணம் போவதே தெரிகிறது" என்றார். அவர் இப்படி சொன்னதும் அருகே இருந்த விசிக நிர்வாகிகள் சிரிப்பலையில் மூழ்கினர்.

தொடர்ந்து பேசிய திருமாவளவன், "இந்த நடைப்பயணம் எந்த வகையிலும் தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. என்னதான் அவர் குட்டிக்கரணம் போட்டாலும், தரையில் படுத்து உருண்டாலும் தமிழ்நாட்டில் பாஜக வேர் பிடிக்காது. சனாதன அரசியலுக்கு ஏற்ற மண் இல்லை தமிழ்நாடு. இது நல்ல கருத்துகள் வளரும் கரிசல் மண். இதில் சனாதனம் என்ற நச்சுக்கு இடமில்லை" என்றார்.