இலங்கை

இலங்கையின் அடுத்த ஜனாதிபதியாக ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச நிச்சயம் நியமிக்கப்படுவார் என பிரபல ஜோதிடர் சுமணதாச அபேகுணவர்தன கணித்துள்ளார்.

இணைய ஊடகம் ஒன்றில் இடம்பெற்ற கலந்துரையாடலில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே ஜோதிடர் இதனை தெரிவித்துள்ளார்.

சஜித் பிரேமதாசவுக்கு கஜகேசரி எனும் சக்தி வாய்ந்த ராஜயோகம் இருப்பதாக சுமணதாச அபேகுணவர்தன தெரிவித்தார்.

இதனால் அவர் இலங்கையின் ஆட்சியாளராக தெரிவு செய்யப்படுவார்.

சஜித்தின் ஆட்சியில் இலங்கை அபிவிருத்தி அடையும் எனவும் பொருளாதார மந்தநிலையில் இருந்து இலங்கை மீண்டுவரும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.