இந்தியா: தமிழ்நாடு
நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தன்னை திருமணம் செய்து ஏமாற்றி விட்டதாக நடிகை விஜயலட்சுமி பொலிஸாரிடம் தொடர்ந்து புகார் அளித்து வந்தார்.
இதேவேளை நடிகை விஜயலட்சுமி சீமான் மீது குற்றச்சாட்டுகளையும் தனது ஆதங்கத்தையும் சமூக வலைதளங்கள் மூலம் வெளிப்படுத்தியும் வந்தார்.
இந்தச் சூழலில் யாரும் எதிர்பார்க்காத வகையில் சீமான் மீதான புகார்களை நடிகை விஜயலட்சுமி திரும்பப் பெற்றுள்ளார். இதற்காக வெள்ளிக்கிழமை இரவு வளசரவாக்கம் போலீஸ் நிலையத்திற்கு வந்த அவர், சீமான் மீதான அனைத்து புகார்களைத் திரும்பப் பெற்றுக்கொண்டார். இது தமிழ்நாடு அரசியலில் பெரும் பரபரப்பைக் கிளப்பியுள்ளது.
இதுதொடர்பாக நடிகை விஜலட்சுமி தெரிவித்தாவது,
சீமானை யாரும் எதுவும் செய்ய முடியாது, அவர் சக்திவாய்ந்தவராக இருக்கிறார்.
பொலிஸார் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை. தனி ஒருவராக என்னால் போராட முடியவி்ல்லை. சீமானை எதிர்கொள்ள எனக்கு போதிய ஆதரவு யாரிடமும் இருந்து கிடைக்கவில்லை.
புகார் மீதான நடவடிக்கையில் எந்த முன்னேற்றமும் இல்லை. தொய்வு இருந்தது. வழக்கை வாபஸ் பெற யாரும் என்னை கட்டாயப்படுத்தவில்லை.
தோல்வியை ஒப்புக்கொண்டு புகாரை வாபஸ் பெறுவதாகவும், மீண்டும் பெங்களூருவுக்கே திரும்ப புறப்படுகிறேன் என நடிகை விஜயலட்சுமி தெரிவித்துள்ளார்.