Breaking News

இலங்கையில் பரபரப்பு சம்பவம் - பயணப் பைக்குள் கண்டெடுக்கப்பட்ட சடலம்...!!

இலங்கையில் பரபரப்பு சம்பவம் - பயணப் பைக்குள் கண்டெடுக்கப்பட்ட சடலம்...!!

இலங்கை

கம்பஹாவில் உள்ள ஒரு பகுதியில் பயணப் பொதியொன்றில் இருந்து நேற்றயதினம் (15) சடலமொன்றை பொலிஸார் கண்டெடுத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சீதுவை, தண்டுகம் ஓயாவிற்கு அருகில் கண்டெடுக்கப்பட்ட பயணப் பைக்குள் ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

உயிரிழந்தவர் 35 முதல் 40 வயதுக்கு இடைப்பட்ட வயதுடைய 05 அடி 08 அங்குல உயரமும் சராசரியான உடலும் 02 அங்குல நீளமான முடியும் கொண்ட ஆண் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அவர் சிவப்பு சட்டை மற்றும் பழுப்பு நிற காற்சட்டை அணிந்திருந்ததாகவும் கூறப்படுகிறது.

உயிரிழந்தவரின் கழுத்தில் வலப்புறம் 07 நட்சத்திர அடையாளங்களுடன் பச்சை குத்தப்பட்டிருந்தமையும், தலை மற்றும் கன்னம் ஆகிய இருபுறங்களிலும் காயங்கள் காணப்பட்டதாகவும் பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.

நீதவான் விசாரணைகளை மேற்கொண்டு சடலம் நீர்கொழும்பு வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன் சீதுவை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.