இன்று அதிகாலை ஹமில்டனில் உள்ள மத்திய நகர மதுக்கடைக்கு வெளியே இடம்பெற்ற மோதல் சம்பவத்தை அடுத்து ஒருவர் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் உள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பில் 18 வயது இளைஞன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
துப்பறியும் மூத்த சார்ஜென்ட் ஸ்காட் நீல்சன் கூறுகையில், Hood தெருவில் உள்ள Biddy Mulligans பார் அருகே அதிகாலை 2 மணியளவில் ஒரு குழுவிற்குள் ஏற்பட்ட வாக்குவாதத்தைத் தொடர்ந்து சண்டை ஏற்பட்டது.
இதன்போது ஒருவர் தலையில் தாக்கப்பட்டார்.
அவர் தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார்.
இந்நிலையில் சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் அல்லது இது குறித்து தகவல் தெரிந்தவர்கள் காவல்துறையை தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் என அவர் தெரிவித்துள்ளார்.
செய்தி நிருபர் - புகழ்