Breaking News

Palmerston North அருகே மூன்று வாகனங்கள் மோதுண்டு விபத்து - இருவர் பலி...!

Palmerston North அருகே மூன்று வாகனங்கள் மோதுண்டு விபத்து - இருவர் பலி...!

Palmerston North அருகே உள்ள Ashhurst என்ற இடத்தில் மாநில நெடுஞ்சாலை 3 இல் மூன்று வாகனங்கள் மோதுண்டு விபத்துக்குள்ளாகி உள்ளன.

காலை 6.50 மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

இந்த விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளதாக முதல்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில் Te Maitai சாலைக்கும் Hillcrest சாலைக்கும் இடையே உள்ள சாலை மூடப்பட்டுள்ளது.

வாகன ஓட்டிகள் அப்பகுதியை தவிர்க்குமாறு அறிவுறுத்தப்பட்டது.

மேலும் தீவிர விபத்து பிரிவுக்கு அறிவிக்கப்பட்டது.

செய்தி நிருபர் - புகழ்