Breaking News

Pukekohe வில் வரலாற்று சிறப்புமிக்க இரண்டு மாடி கட்டிடத்தில் தீ...!!

Pukekohe வில் வரலாற்று சிறப்புமிக்க இரண்டு மாடி கட்டிடத்தில் தீ...!!

ஆக்லாந்தின் தெற்கே உள்ள Pukekohe வில் இரண்டு மாடி கட்டிடத்தில் ஏற்பட்ட தீயை அணைக்க தீயணைப்பு வீரர்கள் போராடி வருகின்றனர்.

Monarch பார் மற்றும் உணவகத்தைக் கொண்ட Perkins கட்டிடத்தில் இந்த தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

King தெருவின் மூலையில் உள்ள குறித்த கட்டிடம் 100 ஆண்டுகளுக்கு மேல் பழமையான வரலாற்று சிறப்புமிக்கது என கூறப்படுகிறது.

கட்டிடம் காலியாக இருப்பதாகவும், யாருக்கும் காயங்கள் எதுவும் ஏற்படவில்லை என்றும் தீயணைப்பு மற்றும் அவசரநிலை கூறியது.

11 தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்தில் இருந்தன.

Pukekohe வழியாக செல்லும் பேருந்துகள் மாற்றுப்பாதையில் இயக்கப்படுவதாக ஆக்லாந்து போக்குவரத்து தெரிவித்துள்ளது.

செய்தி நிருபர் - புகழ்