கடந்த ஜூலை மாதத்தில் ஆரம்பித்த கிரிக்கெட் போட்டிகள் இம்மாதம் செப்டெம்பரில் இனிதே முடிந்தது.
இந்தியாவின் பல மாநிலங்களில் இருந்து இங்கு வந்து வாழும் மக்களில் பெரும்பான்மையோர் கிரிக்கெட் ரசிகர்களே! பலர் கிரிக்கெட் விளையாடக் கூடியவர்கள். அதனால் பல வருடங்களாக இங்கு விடுமுறை காலத்தில் கிரிக்கெட் போட்டிகள் நடைபெறுவது வழக்கம்.
சில வருடங்களாக நமது தமிழ்ச் சங்கம் இப்போட்டிக்கான நிதியுதவியும் பொருளுதவியும் வழங்கி வருகிறது. அக்கணம் இவ்வாண்டு இறுதிப் போட்டிகளில் போட்டியிட்ட குஜராத் மற்றும் பெங்களூரு வீரர்களில் பெங்களூரு வென்று 'வெற்றிக் கோப்பையை' தட்டிச் சென்றது.
பெங்களூரு சூப்பர் கிங்ஸ் குழுவின் தலைவர்- திரு.குமரன் தங்க கோப்பையும், குஜராத் தலைவர்-திரு.சுப்பு வெள்ளிக் கோப்பையும்,
சென்னை குழு தலைவர்- திரு.வீரா வெண்கலக் கோப்பையும் வென்றனர்.
ஆர்வத்தோடு விளையாடிய அனைத்து குழுவினருக்கும் மற்றும் இவை அனைத்தையும் சரியாக ஒருங்கிணைத்த ஒருங்கிணைப்பாளர் திரு.ரகுராமன் மணிக்கும் வாழ்த்துக்கள்!
எமது நிருபர் - ஷீலா ரமணன்