இலங்கை
இந்தியாவின் மேற்கு வங்காள முதலமைச்சர் மம்தா பானர்ஜியை இலங்கை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க சந்தித்துள்ளார்.
துபாயில் நேற்றயதினம் இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
இந்த சந்திப்பின்போது ரணில் விக்கிரமசிங்கவை மேற்கு வங்களத்திற்கு வருகைதருமாறு முதல்வர் மம்தா பானர்ஜி அழைப்பு விடுத்துள்ளார்.
மேலும், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு முதலமைச்சர் மம்தா பானர்ஜி ஓவியம் ஒன்றையும் பரிசாக வழங்கியுள்ளார்.