இந்தியா: தமிழ்நாடு
2024 மக்களவை தேர்தலில் ஆளும் கட்சியான பாஜகவை எதிர்கொள்ள 28 கட்சிகள் ஒரே அணியாக இணைந்துள்ளன. காங்கிரஸ், திமுக, திரிணாமுல் காங்கிரஸ்,தேசியவாத காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் கொண்ட இந்த கூட்டணிக்கு I.N.D.I.A என்ற பெயரிடப்பட்டுள்ளது.
இதேபோல் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியை வலுப்படுத்த தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக மக்களவைத் தேர்தல் தொடர்பாக ஆலோசிக்க தேசிய ஜனநாயகக் கூட்டணியின் கூட்டம் டெல்லியில் இன்று நடைபெறுகிறது.
பா.ஜ.க. தேசிய தலைவர் ஜே.பி.நட்டா, உள்துறை அமைச்சர் அமித்ஷா தலைமையில் நடைபெறும் கூட்டத்தில் பங்கேற்குமாறு கூட்டணி கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இதில் பங்கேற்பதற்காக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி விமானம் மூலம் இன்று டெல்லி செல்கிறார். இதனைத்தொடர்ந்து உள்துறை அமைச்சர் அமித் ஷா மற்றும் ஜே.பி.நட்டாவை அவர் சந்தித்து பேசுவார் என செய்திகள் வெளியாகியுள்ளன.