வெலிங்டனில் தண்ணீர் குழாய் வெடித்ததால் CBDயின் பெரும்பகுதிகளுக்கு தண்ணீர் விநியோகம் தடைப்பட்டுள்ளது.
நீர் குழாய் வெடித்ததால் Waring Taylor Street, Queens Wharf மற்றும் Hunter Street ஐ சுற்றியுள்ள குறைந்தது 100 வீடுகள் பாதிக்கப்பட்டுள்ளன.
வெலிங்டன் வாட்டர் செய்தித் தொடர்பாளர் கூறுகையில், Johnston மற்றும் Featherston தெருக்களின் மூலையிலும், நீர்முனையிலும், Waring Taylor தெருவிலும் தண்ணீர் டேங்கர்களை அமைத்து வருவதாக கூறினார்.
குடியிருப்பாளர்கள் மற்றும் வணிக உரிமையாளர்கள் தங்கள் சொந்த கொள்கலன்களை கொண்டு வந்து நீரை பெற்றுக்கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
குழாயை சரி செய்யும் பணிகள் இடம்பெற்ற போது, கஸ்டம்ஹவுஸ் குவேயில் வடக்கு நோக்கி செல்லும் பாதை ஒன்று சுற்றி வளைக்கப்பட்டது.
வெலிங்டன் வாட்டர் வாகன ஓட்டிகள் அப்பகுதியை தவிர்க்குமாறு அறிவுறுத்தியுள்ளது.
வியாழன் மதியம் அல்லது மாலையில் தண்ணீர் விநியோகத்தை மீட்டெடுப்பதை வெலிங்டன் வாட்டர் நோக்கமாகக் கொண்டுள்ளது.
செய்தி நிருபர் - புகழ்