Breaking News

அண்ணாமலை செருப்புக்கு Z பிரிவு பாதுகாப்பு? - கொந்தளித்த காங்கிரஸ் எம்பி மாணிக்கம் தாகூர்...!

அண்ணாமலை செருப்புக்கு Z பிரிவு பாதுகாப்பு? - கொந்தளித்த காங்கிரஸ் எம்பி மாணிக்கம் தாகூர்...!

இந்தியா: தமிழ்நாடு

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் கலந்துகொண்ட நிகழ்ச்சி ஒன்றின் போது அண்ணாமலை தனது காலணியை கழற்றி வைத்துவிட்டு பங்கேற்றிருந்தார்.

இதன்போது அவரது காலணியை மத்திய பாதுகாப்பு படை வீரரை வைத்து காவல் காக்க வைத்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில் தனது காலணியை மத்திய பாதுகாப்பு படை வீரரை வைத்து காவல் காக்க வைத்ததன் மூலம் இந்திய நாட்டு வீரர்களை கொச்சைப்படுத்தி விட்டதாக காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம்தாகூர் குற்றஞ்சாட்டியுள்ளார். அண்ணாமலையின் காலணியை மத்திய பாதுகாப்பு படை வீரர் பாதுகாத்த நிகழ்வை தாம் சும்மா விடப்போவதில்லை என்றும் உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கே நேரடியாக கடிதம் எழுதவுள்ளேன் எனவும் அவர் தெரிவித்தார். தனது காலணியை மத்திய பாதுகாப்பு படை வீரரை பாதுகாக்க வைத்ததற்காக அண்ணாமலை பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

இதன் மூலம் அண்ணாமலைக்கு புதிய தலைவலி உருவாகியுள்ளது. அண்ணாமலையை பொறுத்தவரை அவருக்கு எந்தவிதத்திலும் பாதுகாப்புக்கு பிரச்சனையில்லை என்றும் அப்படியிருக்கும் போது அவருக்கு எதற்கு Z பிரிவு செக்யூரிட்டி வழங்க வேண்டும் என்றும் எனவும் மாணிக்கம் தாகூர் கேள்வி எழுப்பினார்.

நாட்டிற்காக உழைக்கும் வீரர்களுக்கும் பாஜகவும் சரி, அண்ணாமலையும் சரி மரியாதை கொடுக்கவில்லை என விமர்சித்துள்ளார். மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர் இதனைக் கூறினார். மேலும், சனாதனத்தை வைத்து கடந்த சில நாட்களாக சர்ச்சைகள் நீடித்த நிலையில் இப்போது அண்ணாமலையின் காலணியை மத்திய பாதுகாப்பு படை வீரர் காவல் காத்த நிகழ்வை வைத்து சர்ச்சை உருவாக்கியுள்ளது.