இன்று காலை Christchurch இன் கடலோர Redcliffs புறநகர் கடற்கரையில் சடலம் ஒன்று மீட்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

காலை 8.35 மணியளவில் பொது நபர் ஒருவர் சடலத்தை கண்டதாக பொலிசார் அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளனர்.

அந்த நபரை அடையாளம் காணவும், அவரது உறவினருக்குத் தெரிவிக்கவும், அவரது மரணத்திற்கான காரணத்தை கண்டறியவும் இப்போது பணியாற்றி வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.

செய்தி நிருபர் - புகழ்