பாபகுராவில் ஒரு கட்டுமான தளத்தில் கண்டெடுக்கப்பட்ட பாம்பை முதன்மை தொழில்துறை அமைச்சகம் மேலதிக விசாரணைக்கு கொண்டுசென்றுள்ளது.

நியூசிலாந்தின் எல்லை வழியாகவும், ஆக்லாந்து கட்டுமானத் தளத்திலும் பாம்பு எப்படி வந்தது என்பதை கண்டறிவதற்கான விசாரணைகள் நடைபெற்று வருகின்றன.

இப் பாம்பு இளம் ஆண் கம்பள மலைப்பாம்பாக அடையாளம் காணப்பட்டுள்ளது...

நியூசிலாந்து நீர்வாழ் மற்றும் சுற்றுச்சூழல் சுகாதார பாதுகாப்பு மேலாளர் மைக்கேல் டெய்லர், பாம்பு ஒரு குஞ்சு பொரிக்கும் அளவுக்கு பெரிதாக இருந்தது, ஆனால் இதுவரை பாலியல் முதிர்ச்சியடையவில்லை என்று கூறினார்.

"குறைந்தது இரண்டு முதல் மூன்று வாரங்களுக்கு அது சாப்பிடவில்லை” என்றும் அவர் கூறினார்

பாம்பு எவ்வாறு நாட்டிற்குள் நுழைந்தது என்பது குறித்து விசாரணை நடந்து கொண்டிருக்கையில், ஆஸ்திரேலியாவிலிருந்து இறக்குமதி செய்யப்படுவதற்கு முன்னர் பாம்பு ஒரு குழாயில் நுழைந்திருக்கலாமென ஆரம்ப விசாரணையில் தெரியவந்தது

மேலும்,  வேறு பாம்புகள் இருப்பதற்கான எந்த ஆதாரமும் இல்லையெனவும், பொதுமக்கள்  பயப்பட தேவையில்லை எனவும் தெரிவிக்கப்படுகிறது.