இந்திய திரையுலகின் முன்னணி நடிகரான ரஜினிகாந்த் தற்போது இயக்குனர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் 'ஜெயிலர்' படத்தில் நடித்துள்ளார்.

இதில் மலையாள நடிகர் மோகன்லால், கன்னட நடிகர் சிவராஜ்குமார் மற்றும் பிரியங்கா மோகன், ரம்யா கிருஷ்ணன், யோகிபாபு, வசந்த் ரவி, விநாயகன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.

இப்படத்தில் ரஜினி, முத்துவேல் பாண்டியன் கதாபாத்திரத்தில் ஜெயிலராக நடிக்கிறார்.

அதிரடி சண்டை படமாக தயாராகி வந்த இந்த படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துவிட்டதாக படக்குழு தெரிவித்துள்ளது.

இதனை படக்குழுவினர் கேக் வெட்டி கொண்டாடியுள்ளனர்.

இதனிடையே இப்படம் வருகிற ஆகஸ்ட் 10 ஆம் திகதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.