Far North நகரமான Kaikohe வில் உள்ள ஒரு வீட்டில் நபர் ஒருவர் அத்துமீறி நுழைந்த சம்பவத்தில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

நேற்று இரவு 11.30 மணியளவில் Taraire தெருவில் அமைந்துள்ள குறித்த வீட்டில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இதனையடுத்து சம்பவ இடத்திற்கு பொலிஸார் அழைக்கப்பட்டனர்.

வீட்டில் இருந்தவர்களுக்கும் வீட்டினுள் அத்துமீறி நுழைந்தவருக்கும் இடையே ஏற்பட்ட மோதலில் பெண் ஒருவர் பலத்த காயம் அடைந்தார்.

அவசர சேவைகள் பாதிக்கப்பட்ட பெண்ணிற்கு சிகிச்சை அளித்த போதும் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

என்ன நடந்தது என்பதை உறுதிப்படுத்தும் பணியில் பொலிசார் ஈடுபட்டுள்ளனர் மற்றும் சம்பவ இடத்திலிருந்து தப்பி ஓடிய நபரைக் கண்டுபிடிக்க பொலிஸார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த கட்டத்தில், யாரும் கைது செய்யப்படவில்லை என்று டிடெக்டிவ் இன்ஸ்பெக்டர் ரைஸ் ஜான்ஸ்டன் கூறினார்.