ஒடாகோ நகரமான Wanaka வில் காரொன்று வீடொன்றின் மீது மோதியதில் நபர் ஒருவர் பலத்த காயமடைந்தார்.
Weatherall Close என்ற இடத்தில் அதிகாலை 4.50 மணியளவில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
காருக்கும் வீட்டிற்கும் இடையில் ஒருவர் சிக்கியிருந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.
தீ மற்றும் அவசர சேவைகள் சுமார் இரண்டு மணி நேரம் போராடி குறித்த நபரை விடுவித்தனர்.
இரண்டு ஆம்புலன்ஸ்கள் மற்றும் ஒரு ஹெலிகாப்டர் சம்பவ இடத்திற்கு வந்ததாக செய்தித் தொடர்பாளர் ஒருவர் தெரிவித்தார்.
இதனையடுத்து பாதிக்கப்பட்ட நபர் ஹெலிகாப்டர் மூலம் Dunedin மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளார்.