அமெரிக்காவில் இருந்து ஆக்லாந்து சர்வதேச விமான நிலையத்திற்கு சூட்கேஸில் சுமார் 20 கிலோ மெத்தாம்பேட்டமைன் போதைப்பொருளை கொண்டு வந்த பாடகர் ஒருவருக்கு தற்போது ஏழு ஆண்டுகள் மற்றும் மூன்று மாதங்கள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

ஆக்லாந்தைச் சேர்ந்த ரோம்னி 'கோனெக்ஸ்' ஃபுகோஃபுகா என்ற 28 வயதான குறித்த பாடகர், கடந்த 2020 ஆம் ஆண்டு மே மாதம் சூட்கேஸில் 19.4 கிலோ எடையுள்ள A வகை போதைப்பொருளுடன் விமான நிலையத்தில் சுங்க ஊழியர்களால் தடுத்து நிறுத்தப்பட்டார்.

இந்த போதைப்பொருள் சுமார் 7.8 மில்லியன் டொலர்கள் மதிப்புள்ளவை என தேசிய மருந்துப் புலனாய்வுப் பணியகம் தெரிவித்தது.

இந்நிலையில் இந்த சம்பவம் தொடர்பிலான வழக்கு விசாரணையில் தற்போது குறித்த பாடகருக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.