Breaking News

Christchurch இல் இடம்பெற்ற தொடர் கொள்ளை சம்பவங்கள் - பொலிஸார் விசாரணை...!!

Christchurch இல் இடம்பெற்ற தொடர் கொள்ளை சம்பவங்கள் - பொலிஸார் விசாரணை...!!

Christchurch இல் உள்ள வணிகங்களை குறிவைத்து நேற்றைய தினம் எட்டு கொள்ளை சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன.

இவை அனைத்தும் நேற்றைய தினம் மாலை 3.30 மணி முதல் 6.30 மணி வரை நடந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

ஒரு கொள்ளை சம்பவத்தில் குற்றவாளிகள் கோடரியைப் பயன்படுத்தி Wigram பகுதியில் உள்ள ஒரு பல்பொருள் அங்காடியின் முன் கதவுகளை உடைத்தனர்.

திருடப்பட்ட பொருட்களை கண்டறிய வணிக நிலைய உரிமையாளர்களுடன் அதிகாரிகள் பணியாற்றி வருவதாகவும், சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து வருவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

இதுவரை ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மேலும் சம்பந்தப்பட்ட குற்றவாளிகளை கைது செய்ய பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.