Breaking News

என்னது ஒரு ஐஸ்கிரீம் ஐந்து லட்சமா?; உலகிலேயே விலை உயர்ந்த ஐஸ்கிரீம் ஜப்பானில் கண்டுபிடிப்பு - ஆமா அப்படி என்ன ஸ்பெஷல்...??

என்னது ஒரு ஐஸ்கிரீம் ஐந்து லட்சமா?; உலகிலேயே விலை உயர்ந்த ஐஸ்கிரீம் ஜப்பானில் கண்டுபிடிப்பு - ஆமா அப்படி என்ன ஸ்பெஷல்...??

ஜப்பான் நிறுவனம் ஒன்று உலகின் மிக விலை உயர்ந்த ஐஸ்கிரீம் ஒன்றை செய்து சாதனை படைத்துள்ளது.

"செல்லாட்டோ" என்ற ஐஸ்கிரீம் பிரான்ட் தயாரித்த இந்த ஐஸ்கிரீம்  இத்தாலி, அல்பாவில் வளர்க்கப்படும் ஒருவகை அரிய வெள்ளை நிற பாசிகளைக் கொண்டு தயாரிக்கப்பட்டுள்ளது.

இந்த அரிய வகை வெள்ளை நிற பாசி மிக விலை உயர்ந்தது. இதனால் தயாரிக்கப்பட்ட இந்த ஐஸ்கிறீமும் அதிக விலையைக் கொண்டுள்ளது.

இதில் "பார்மிஜியானா ரெஜியானோ " மற்றும் சேக்லீஸ் ஆகிய சிறப்பு மூலப்பொருட்களும் சேர்க்கப்பட்டுள்ளது.

ஒரு கிலோ ஐஸ்கிரீம் இந்திய மதிப்பில் 5.2 இலட்சம் ரூபாய் எனப்படுகிறது.