நியூசிலாந்தின் கிழக்கே உள்ள வடக்கு தீவுக்கு சற்றுமுன்னர் (அங்கு வெள்ளிக்கிழமை அதிகாலை) 7.3 ரிச்டர் அளவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின் பின்னர் நியூசிலாந்திற்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக பசிபிக் சுனாமி எச்சரிக்கை மையம் (PTWC) தெரிவித்துள்ளது.

அமெரிக்க புவியியல் ஆய்வு மையத்தின் படி, ஆரம்பத்தில் 7.3 என்ற பூகம்பம் உண்டாகியது, பின்னர் அதை 6.9 ஆக மாற்றியது. சுமார் 10 கி.மீ ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது என்று தெரிவித்துள்ளது.

மேலும், நிலநடுக்கத்தின் மையப்பகுதியிலிருந்து 300 கி.மீ பரப்பளவில் சுனாமி அலைகள் பாதிப்பை ஏற்படுத்தும் சாத்தியம் இருப்பதாக PTWC தெரிவித்துள்ளது.