விஜய் ஆண்டனி நடித்து, அவரே கதை எழுதி, இயக்கி, இசையமைத்திருக்கும் திரைப்படம் பிச்சைக்காரன் 2.
காவ்யா தாப்பர், தேவ் கில், ஜான் விஜய், ஹரீஷ் பேரடி, யோகிபாபு, மன்சூர் அலிகான் என பலரும் இந்த திரைப்படத்தில் நடித்துள்ளனர்.
இத்திரைப்படம் நேற்று திரையரங்கில் வெளியாகி கலவையான விமர்சனத்தை பெற்றுள்ளது. 20 கோடி பட்ஜெட்டில் உருவாகி உள்ள இப்படம் தமிழ்நாட்டில் 3 கோடியே 80 லட்சமும், கேரளாவில் 15 லட்சமும், கர்நாடகாவில 60 லட்சமும், ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் 4 கோடியே 50 கோடியும், நார்த் இந்தியாவில் 10 லட்சமும், இந்தியாவில் மட்டும் 9 கோடியே 15 லட்சத்தை வசூலித்துள்ளது.
உலகம் முழுவதும் பிச்சைக்காரன் 2 திரைப்படம் 9 கோடியே 65 லட்சத்தை வசூலித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
ஒரு நடிகராக தனது முந்தைய படங்களில் பாக்ஸ் ஆபிஸில் தனது திறமையை ஏற்கனவே நிரூபித்த விஜய் ஆண்டனி தான் இயக்குனராக அறிமுகமான பிச்சைக்காரன் 2 மூலம் தனது வெற்றிகரமான பயணத்தைத் தொடருவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இன்றும் நாளையும் விடுமுறை தினம் என்பதால், வசூல் கணிசமாக அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.