இந்தியா: தமிழ்நாடு

பாஜக செயற்குழு கூட்டம் கோவையில் நேற்று நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் பேசிய மாநிலத்தலைவர் அண்ணாமலை ,  தமிழ் மக்கள் மீது அதிகளவில் பிரதமர் அன்பு வைத்துள்ளார். ஜனநாயகத்தின் தலைவராக பிரதமர் இருக்கிறார். ஒன்பது ஆண்டை கடந்து 10வது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறார். இன்னும் 5 ஆண்டு காலம் அவரை பிரதமராக ஆக்க வேண்டும்.

தேனிக்களை போல் சுறுசுறுப்பாக பணி செய்ய வேண்டும். தமிழகத்தில் இருந்து எத்தனை எம்பிக்களை அனுப்பப் போகிறோம் என்பதை திட்டமிட வேண்டும். இந்தியாவை அடிப்படையில் இருந்து மாற்றியுள்ளார் பிரதமர்.

இன்னொரு பாதையில் அழைத்துச் சென்றுள்ளார். குடிமக்களை பாதுகாப்பது மன்னனின் முதல் பணி. அதை தான் பிரதமர் செய்து வருகிறார்.

மூன்றாவது பெரிய பொருளாதார நாடாக நாம் மாறப் போகிறோம். அதற்கான அடிப்படை பணியை பிரதமர் செய்து வருகிறார். சீனாவும் இந்தியாவும் தான் வருங்காலத்தில் மாறி மாறி பொருளாதார வளர்ச்சி பெற்ற நாடாக இருக்கும் என்று கூறினார். 350 ஆண்டுகளுக்கு பிறகு பொருளாதாரத்தில் முன்னேறும் நாடாக நாம் உள்ளோம். இந்தியாவின் பொருளாதரம் உயர உயர தமிழ்நாட்டின் பொருளாதாரம் குறைகிறது. மற்ற மாநிலங்கள் முன்னேறி வருகிறது. திராவிட அரசின் 30 சதவீதம் கமிஷனால்தான் தமிழ்நாடு பின்னோக்கிச் செல்கிறது.

மே 30 முதல் ஜூன் 30 வரைக்கும் பிரதமரின் நலத்திட்டங்களை பெரிய இயக்கமாக மக்களிடம் எடுத்து செல்கிறோம். பாஜக ஆட்சிக்கு வந்தபோது 18 ஆயிரம் கிராமங்களில் இந்தியாவில் மின்சாரம் இல்லை. ஆனால் இப்போது மின்சாரம் இல்லாத கிராமமே கிடையாது. இப்போது நம்முடைய நாடு 100 சதவீதம் மின்சாரம் நிறைந்த நாடாக உள்ளது என்று கூறினார்.