லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடிக்கும் திரைப்படம் லியோ.

இந்த படத்தில் விஜய்யுடன் த்ரிஷா, சஞ்சய் தத், அர்ஜுன், மன்சூர் அலிகான், மாத்யூ தாமஸ், கௌதம் மேனன், ப்ரியா ஆனந்த், மிஷ்கின், ப்ரியா ஆனந்த் என பெரும் நட்சத்திர பட்டாளமே களமிறங்கியிருக்கிறது.

இதன் டைட்டில் டீசர் வெளியாகி அமோக வரவேற்பைப் பெற்றது. அனிருத் இசையமைத்திருக்கிறார்.

மேலும் இப்படத்தில் ஒரு பாடலுக்காக 2000 டான்ஸர்கள் பயன்படுத்தப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்தப் படத்தை மெகா ப்ளாக்பஸ்டராக கொடுத்துவிட வேண்டும் என்பதில் லோகேஷ் கனகராஜ் ரொம்பவே தீவிரமாக இருக்கிறார்.

அந்தவகையில் லியோ படத்தில் தற்போது பிரபல கிரிக்கெட் வர்ணனையாளரான ப்ரதீப் முத்து இணைந்திருப்பதாக கூறப்படுகிறது.

அவர் தனது ட்விட்டர் பயோவில் இதுவரை தான் நடித்த மீசைய முறுக்கு, வீட்ல விசேஷம் உள்ளிட்ட படங்களுடன் லியோ படத்தையும் இணைத்திருக்கிறார்.

இதன் காரணமாக அவர் லியோவில் நடிக்கிறார் என்ற பேச்சு எழுந்திருக்கிறது.

லியோ படம் அக்டோபர் 19ஆம் திகதி ரிலீஸாகவிருப்பது குறிப்பிடத்தக்கது.