வெலிங்டனில் உள்ள தங்கும் விடுதி ஒன்றில் இன்று அதிகாலையில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் பலர் பலியாகினர்.

Newtown இல் உள்ள Adelaide சாலையில் அமைந்துள்ள Loafers என்ற குறித்த லாட்ஜில் இந்த தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

தீ விபத்து ஏற்பட்ட நேரத்தில் கட்டிடத்தில் எத்தனை பேர் இருந்தனர் என்பது குறித்து இன்னும் துல்லியமாக கூற முடியவில்லை என பொலிஸார் தெரிவித்தனர். ஆனால் 10 இற்கும் குறைவானவர்கள் உயிரிழந்ததாக தெரிவித்தனர்.

வெலிங்டன் மருத்துவமனையின் அவசர சிகிச்சைப் பிரிவில் நான்கு பேர் அனுமதிக்கப்பட்டனர்.

மூவரின் உடல்நிலை சீராக உள்ளது மற்றும் ஆபத்தான நிலையில் உள்ள நான்காவது நபர் Hutt மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

தீ விபத்து சந்தேகத்திற்குரியது என்று சில ஊடகங்களில் வந்த செய்திகளுக்கு பதிலளித்த பொலிசார், இந்த கட்டத்தில் கருத்து தெரிவிக்க முடியாது, ஆனால் இன்று புதுப்பிப்புகளை வழங்குவோம் என்று தெரிவித்தனர்.

இந்த தீ விபத்து ஒரு சோகம் மற்றும் ஒரு பயங்கரமான சூழ்நிலை என்று பிரதமர் கிறிஸ் ஹிப்கின்ஸ் கூறினார்.

வெலிங்டன் மத்திய பாராளுமன்ற உறுப்பினர் கிராண்ட் ராபர்ட்சன், கொடிய தீயில் இருந்து தப்பியவர்கள் மிகவும் அதிர்ச்சியடைந்துள்ளனர் என்றார்.

தீயணைப்பாளர்கள் இன்னும் உயிரிழப்புகள் நேர்ந்துள்ளதா என தேடுகின்றனர் மற்றும் நகர்ப்புற தேடல் மற்றும் மீட்புக் குழுவும் இந்த பணியில் ஈடுபட்டுள்ளது.