நியூசிலாந்தின் மூத்த மனிதர் தனது 107வது வயதில் காலமானார்.

Rangitīkei மாவட்டத்தில் உள்ள Marton நகரில் 70 ஆண்டுகளாக வசித்து வந்த Jack Coe, தனது 107வது பிறந்தநாளைக் கொண்டாடிய இரண்டு நாட்களுக்குப் பிறகு கடந்த சனிக்கிழமை (13) மரணமடைந்தார்.

Jack Coe, 1916 ஆம் ஆண்டு மே மாதம் பிறந்தார்.

கடந்த நான்கு மாதங்களுக்கு முன்பு உடல்நலம் குன்றிய நிலையில் இவர் Taupō இல் உள்ள தனது குடும்பத்துடன் நாட்களை கழித்து வந்தார்.

நியூசிலாந்தின் மிக வயதான நபர் Palmerston North ஐ சேர்ந்த எலைன் கார்ஸ் என்ற பெண் ஆவார்.

இவர் கடந்த ஆண்டு செப்டம்பரில் தனது 109 ஆவது பிறந்தநாளை கொண்டாடினார்.