ஷங்கரின் இயக்கத்தில் கடந்த 2018 ஆம் ஆண்டு துவங்கப்பட்ட திரைப்படம் தான் இந்தியன் 2.

அரசியல், டிவி நிகழ்ச்சிகள் என கமல் பிஸியானதால் அவர் நடித்துக்கொண்டிருந்த இந்தியன் 2 படம் பல பிரச்சனைகளில் சிக்கி கிடப்பில் போடப்பட்டது.

தற்போது மீண்டும் இந்தியன் 2 படத்தின் படப்பிடிப்பு துவங்கியுள்ளது.

இந்நிலையில் கமலின் நடிப்பில் மிகப்பிரமாண்டமான வெற்றிப்படமான அமைந்த இந்தியன் படத்தின் இரண்டாம் பாகத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருந்து வந்தது.

குறிப்பாக மறைந்த நடிகர் சின்ன கலைவாணர் விவேக் முதல் முறையாக கமலுடன் இணைந்து நடிக்கின்றார் என்பதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு பல மடங்கு உயர்ந்தது.

ஆனால் எதிர்பாராத விதமாக நடிகர் விவேக் கடந்த 2021 ஆம் ஆண்டு மாரடைப்பால் மரணமடைந்தார். எனவே இந்தியன் 2 படத்தில் விவேக் நடித்த காட்சிகள் இடம்பெறுமா இல்லை அவருக்கு பதிலாக வேறொரு நடிகரை நடிக்கவைப்பார்களா என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் இருந்து வந்தது.

ஆனால் உலகநாயகன் கமல்ஹாசன் இந்தியன் 2 படத்தில் விவேக் நடித்த காட்சிகள் அனைத்தும் இடம்பெற வேண்டும் என ஷங்கரிடம் கூறிவிட்டாராம்.

இதைத்தொடர்ந்து தற்போது இப்படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வரும் நடிகர் பாபி சிம்ஹா இந்தியன் 2 படத்தில் விவேக்கின் கதாபாத்திரம் பற்றி பேசியுள்ளார்.

அவர் கூறியதாவது, இந்தியன் 2 படத்தில் விவேக்கின் காட்சிகள் அனைத்தும் இடம்பெறும் என்றும், இப்படத்தில் நாம் வித்யாசமான விவேக்கை பார்க்கலாம் என்றும் கூறியுள்ளார்.

இதையடுத்து விவேக்கின் காட்சிகள் இடம்பெறுமா இல்லையா என்ற சந்தேகத்தில் இருந்த ரசிகர்கள் தற்போது இத்தகவலை கேட்டு மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

இந்தியன் 2 திரைப்படம் அடுத்தாண்டு துவக்கத்தில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகின்றது.