இந்தியா: தமிழ்நாடு

காமெடி நடிகர்கள் விவேக், வடிவேல் ஆகியோருடன் நகைச்சுவை காட்சிகளில் நடித்தவர் போண்டாமணி.

இவர்கள் எந்த படத்தில் நடித்தாலும் அதில் கிடைக்கும் ஊதியத்தில் அவர்களுக்கு தேவைப்போக மீதி உள்ளதை இவர்களுக்கு ஊதியமாக வழங்குவர்.

சமீபத்தில் சிறுநீரக செயலிழப்பால் பாதிக்கப்பட்ட போண்டாமணி ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்த நிலையில் போண்டா மணிக்கு மனோபாலா
பார்த்திபன், தனுஷ் உள்ளிட்டோரும் உதவியிருந்தனர்.

இதையடுத்து அவருடைய உறவினர் ஒருவரின் சிறுநீரகம் தானமாக பெறப்பட்டு அறுவை சிகிச்சை வெற்றிகரமாக நடந்தது.

இந்நிலையில் போண்டாமணியின் மகள் சாய்குமாரி பிளஸ் 2 தேர்வு எழுதியிருந்தார்.

கடந்த 8 ஆம் திகதி தேர்வு முடிவுகள் வந்த நிலையில் அவர் 600-க்கு 400 மதிப்பெண்களை பெற்று தேர்ச்சி பெற்றுள்ளார்.

தந்தைக்கு உடல்நிலை பாதிப்பு ஏற்பட்டதால் வீட்டில் வருமானம் இன்றி எத்தனையோ கஷ்டங்களை அந்த குழந்தைகள் சந்தித்திருப்பர். எனினும் இத்தனை ஏழ்மை நிலையிலும் அந்த குழந்தை 400 மதிப்பெண்களை பெற்றுள்ளார்.

தந்தை முன்பு போல் ஆரோக்கியமாக இருந்திருந்தால் அவர் இன்னும் கூடுதலாக மதிப்பெண்களை பெற்றிருக்கலாம்.

இந்நிலையில் தனது மகளுக்கு உயர்கல்வி கொடுக்க தயாரிப்பாளரும் வேல்ஸ் கல்லூரி இயக்குநருமான ஐசரி கணேஷ் முன்வந்துள்ளதாக போண்டாமணி நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து போண்டாமணி கூறுகையில் நான் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறேன். ஏனென்றால் இவ்வளவு நாள் பட்ட கஷ்டத்திற்கு எனக்கு கிடைத்த பரிசாக என் மகள் 12 ஆம் வகுப்பு தேர்வில் 400 மதிப்பெண்களை பெற்று தேர்ச்சி பெற்றுள்ளார்.

இதன் பிறகு கல்லூரியில் சேர்க்க வேண்டும். அதற்கு பணம் வேண்டும் என வேதனையாக இருந்தது. ஆனால் ஐசரி கணேஷ் சார் நான் உடல்நிலை சரியில்லாமல் இருந்த போது உங்கள் மகள் பிளஸ் 2 தேர்வில் தேர்ச்சி அடைந்தால் எவ்வளவு செலவானாலும் அவரை படிக்க வைக்கிறேன் என உறுதியளித்திருந்தார்.

அவர் அன்று சொன்னதை போல என் மகளின் ரிசல்ட்டை அறிந்தவுடனேயே அவருடைய வேல்ஸ் கல்லூரியில் ஒரு ரூபாய் கூட கட்டணம் வாங்காமல் என் மகளுக்கு பிசிஏ படிக்க சீட் கொடுத்துள்ளார்.

இப்படி ஒரு நல்ல மனிதர் தெய்வத்திற்கு சமம். இது என் உழைப்புக்கு கிடைத்த வெற்றி, நான் எப்போதும் அவருக்கு நன்றி கடன்பட்டிருக்கிறேன் என உருக்கமாக தெரிவித்தார்.