வெலிங்டனில் 13 வயது சிறுமி காணாமல் போன சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஒலிவியா என்ற குறித்த சிறுமி நேற்று முன்தினம் (10) புதன்கிழமை அன்று Churton Park இல் அமைந்துள்ள தனது வீட்டில் இருந்த நிலையில் காணாமல் போனதாக கூறப்படுகிறது.

அவர் கடைசியாக கருப்பு மற்றும் சாம்பல் நிற ஹூடி மற்றும் சாம்பல் நிற ட்ராக்சூட் பேன்ட் அணிந்திருந்ததாகவும், அவருடன் ஒரு முதுகுப்பையை எடுத்துச் சென்றதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

காவல்துறை மற்றும் அவரது குடும்பத்தினர் அவரது நலனில் அக்கறை கொண்டுள்ளனர் என்று காவல்துறை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒலிவியாவைப் பார்த்தவர்கள் அல்லது அவர் இருக்கும் இடத்தைப் பற்றி ஏதேனும் தகவல் தெரிந்தவர்கள் 105 என்ற எண்ணில் காவல்துறையை தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.