நியூசிலாந்து முழுவதும் இருந்து வந்த இராட்சத பலூன்கள் இன்று காலை Canterbury வானத்தை அலங்கரித்தன.

இது இரண்டு வருடத்திற்கு ஒருமுறை நடைபெறும் Hororata Glow Festivalக்கான தயாரிப்புகளின் ஒரு பகுதியாகும்.

இந்நிலையில் முழு நிகழ்ச்சியும் பலூன்களை அடிப்படையாக கொண்டு செய்யப்படுவதாக கூறப்படுகிறது.

இந்த நிகழ்வு நியூசிலாந்தில் நான்காவது முறையாக  கொண்டாடப்படுகிறது.

"நாங்கள் இதை எங்கள் சமூகத்திற்காக செய்கிறோம், இது எங்கள் கிராமப்புற பகுதிக்கு மக்களை அழைத்து வந்து நிதி திரட்டும் நிகழ்வு" என இந்த நிகழ்ச்சியின் அமைப்பாளர் சிண்டி டிரிஸ்கோல் தெரிவித்தார்.

அனைத்து பலூன்களும் நாடு முழுவதும் இருந்து வந்துள்ளன.

11,000க்கும் மேற்பட்டோர் கலந்துகொள்வார்கள் என எதிர்பார்க்கப்படும் இந்த நிகழ்ச்சியில் டிக்கெட்கள் விற்றுத் தீர்ந்து விட்டன. இது South Island இன் மிகப்பெரிய இராட்சத பலூன் நிகழ்வு இதுவாகும்.