நியூசிலாந்தின் மிக இளம் வயது மேயரை பதவி விலகுமாறு அவரது கவுன்சிலின் பெரும்பான்மையினர் கோரியுள்ளனர்.

கடந்த வருடம் அக்டோபரில் நடந்த உள்ளூர் தேர்தல்களில் பென் பெல் என்ற இளைஞர் Gore மாவட்ட மேயராக தெரிவு செய்யப்பட்டார்.

மேலும் நியூசிலாந்தின் முதல் இளம் வயது மேயர் என்ற பெருமையையும் பெற்றார்.

இதனையடுத்து Gore மாவட்ட கவுன்சில் சர்ச்சைகள் மற்றும் முரண்பாடுகளால் சூழப்பட்டுள்ளது.

பெல் தனக்கு சொந்த நிர்வாக உதவியாளரை நியமிக்க விரும்புவது, வெலிங்டனில் மேயர் பயிற்சிக்கான அவரது பயணத்திற்கான செலவுகள், குழு அமைப்பு மற்றும் உறுப்பினர்களுக்கான மேயரின் திட்டம் மற்றும் கோரிக்கை ஆகியவை தொடர்பில் பல்வேறு சர்ச்சைகள் எழுந்தன.

மேயர் பெல் மற்றும் கவுன்சில் தலைமை நிர்வாகி ஸ்டீபன் பாரி இருவரிடையே கருத்து முரண்பாடுகள் காணப்பட்டதை அடுத்து கடந்த மாதம் நடந்த கூட்டத்தில், கவுன்சிலர் ரிச்சர்ட் மெக்பைல் இருவருக்கும் இடைத்தரகராக நியமிக்கப்பட்டார்.

இப்போது மெக்பைல், துணை மேயர் கீத் ஹோவெல் மற்றும் மற்ற எட்டு கவுன்சிலர்களில் ஐந்து பேர் 
மேயர் பெல்லை பதவி விலகுமாறு கூறியுள்ளனர்.

இதனிடையே நேற்றைய தினம், ஹோவெல் மற்றும் மெக்பைல் மேயர் பெல்லை ராஜினாமா செய்யும்படி அவரைச் சந்தித்து பேசியதாக கூறப்படுகிறது.

சமீபத்திய வாரங்களில் பெல்லின் நடவடிக்கைகள் அவரது ராஜினாமாவைக் கோருவதற்கு வழிவகுத்தன என ஹோவெல் கூறினார்.

பெரும்பான்மையான கவுன்சிலர்கள் மேயர் மீதான நம்பிக்கையை இழந்துவிட்டதுடன், சமூகம் மற்றும் ஒட்டுமொத்த சபையின் நலன்களுக்காக அவர் செயல்படுவார் என்ற நம்பிக்கையையும் இழந்துவிட்டனர் என ஹோவெல் கூறினார்.

ஆனால் பெல் அந்த கோரிக்கையை நிராகரித்தார். அதன் விளைவாக கவுன்சில் அடுத்த வாரம் ஒரு அசாதாரண கூட்டத்தை நடத்தி அவர் பதவி விலகுவது தொடர்பில் வாக்களிக்க வேண்டும், இதில் தலையிட உள்ளூர் அரசாங்க மந்திரி கீரன் மெக்அனுல்டியை அழைக்க உள்ளதாக அவர் தெரிவித்தார்.

மத்திய அரசாங்கத்தின் ஆதரவுடன் Gore மாவட்டத்தில் ஜனநாயகப் பிரதிநிதித்துவத்தை கவுன்சில் பாதுகாக்க முடியும் என்று தான் நம்புவதாக ஹோவெல் கூறினார்.

பரந்த சமூகம் மற்றும் நாங்கள் சேவை செய்யும் மக்களின் நலன்களை தொடர்ந்து பிரதிநிதித்துவப்படுத்த நாங்கள் ஆர்வமாக உள்ளோம் என்று அவர் கூறினார்