Southland இல் பனிப்பொழிவு ஆரம்பமாகி உள்ளது.

Mossburn மற்றும் Te Anau  இடையே உள்ள Gorge Hill இல்  மாநில நெடுஞ்சாலை 94 இல் சுமார் 10 சென்டிமீட்டர் பனி பொழிந்துள்ளது.

சில ஓட்டுநர்கள் சிக்கிக் கொண்டதாகவும் அவர்களுக்கு உதவி தேவைப்படுவதாகவும் Waka Kotahi கூறியது.

SH94 பயணம் செய்யக்கூடியதாக உள்ளது, ஆனால் பனியில் வாகனம் ஓட்டுவதில் சிறிய அனுபவம் உள்ளவர்கள் பயணத்தைத் தவிர்க்க வேண்டும் என்று போக்குவரத்து நிறுவனம் கூறியது.

அடுத்த இரண்டு நாட்களில் ஒடாகோ மற்றும் Southland இல் கடுமையான பனிப்பொழிவு எதிர்ப்பார்க்கப்படுகிறது.

இன்று மாலை 4 மணி முதல் நாளை அதிகாலை 2 மணி வரை கிழக்கு Fiordland, வடக்கு Southland மற்றும் தெற்கு ஒடாகோவில் 700 மீட்டருக்கு மேல் பனிப்பொழிவு எதிர்ப்பார்க்கப்படுகிறது.

Lindis Pass (State Highway 8), Crown Range சாலை, Milford சாலை (SH94), மற்றும் Canterbury இல் உள்ள அல்பைன் பாதைகளுக்கு சாலை பனிப்பொழிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.