South Island முழுவதும் இன்றிரவு குறிப்பிடத்தக்க பனிப்பொழிவு எதிர்ப்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் Lindis Pass, Crown Range சாலை, Arthur's Pass, Lewis Pass, Porters Pass மற்றும் Milford சாலை ஆகியவற்றில் சாலை பனிப்பொழிவு எச்சரிக்கைகள் இருப்பதாக MetService கூறுகிறது.

இன்று பிற்பகல் முதல் நாளை அதிகாலை வரை சாலைகளில் 6 சென்டிமீட்டர் வரை பனிப்பொழிவு ஏற்படக்கூடும்.

மத்திய ஒடாகோ மற்றும் Queenstown-Lakes மாவட்டங்கள் மற்றும் Mackenzie Country ஆகியவற்றின் பெரும்பகுதியில் கடுமையான பனிப்பொழிவு எதிர்ப்பார்க்கப்படுகிறது.

அந்த பகுதிகளில் பனிப்பொழிவு 400 அல்லது 500 மீட்டருக்கு மேல் இருக்கும் எனவும், 6 மணி நேரத்தில் 10 செ.மீ.க்கு மேல் பனி குவியும் என்றும் MetService எச்சரிக்கை விடுத்துள்ளது.

மேலும் வடக்கே, Desert சாலையில் நாளை அதிகாலை 1 மணி முதல் 11 மணி வரை சாலையில் பனிப்பொழிவு ஏற்படும் என எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

இன்று நள்ளிரவில் பனி பொழிவு 900 மீட்டருக்கு மேல் உருவாகும் என எதிர்பார்க்கப்படுவதாகவும், மற்றும் மலைகளுக்கு அருகில் உள்ள சாலையில் லேசான பனிப்பொழிவு ஏற்படக்கூடும் என்றும் MetService தெரிவித்துள்ளது.