ஆக்லாந்தின் புறநகர் பகுதியான Mount Wellington இல் உள்ள ஒரு வீட்டின் மீது பெரிய டிரக் ஒன்று மோதுண்டு விபத்துக்குள்ளாகியுள்ளது.

Carbine சாலை மற்றும் Waipuna சாலை சந்திப்பில் இன்று நள்ளிரவுக்குப் பிறகு இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

தற்போது அந்த டிரக் வீட்டில் இருந்து அகற்றப்பட்டுள்ளது.

இந்த விபத்தில் மூவர் காயமடைந்த நிலையில் அவர்களுக்கு சம்பவ இடத்திலேயே சிகிச்சை அளிக்கப்பட்டது.

இந்நிலையில் Ireland சாலை மற்றும் Convamore Lane இடையே Waipuna சாலையின் ஒரு பகுதி தடுக்கப்பட்டுள்ளது என பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த போக்குவரத்து இடையூறு சிறிது நேரம் நீடிக்கும் என வாகன ஓட்டிகள் அறிவுறுத்தப்பட்டனர்.