சென்ட்ரல் ஒடாகோவின் St Bathans பகுதியில் காட்டுப் பன்றிகளின் நடமாட்டம் அதிகரித்துள்ளதை அடுத்து அப்பகுதி குடியிருப்பாளர்கள் அச்சமடைந்துள்ளனர்.

கடந்த மார்ச் மாதம் அப்பகுதி குடியிருப்பாளர் ஒருவரை காட்டுப்பன்றி தாக்கியது மட்டுமின்றி அதன் தந்தத்தால் அவரது கண்ணுக்கு அருகில் குத்தி கழித்து கீழே தள்ளிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

St Bathans இல் ஒரு சில குடியிருப்பாளர்கள் மட்டுமே உள்ளனர், ஆனால் அவர்களின் தோட்டங்களையும் நகரங்களையும் காட்டுப் பன்றிகள் அழிப்பதாக அவர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

மேலும் ஒவ்வொரு நாளும் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் அப்பகுதிக்கு வருகை தருவதால் அவர்கள் அல்லது உள்ளூர்வாசிகளை இந்த காட்டுப்பன்றிகள் தாக்கலாம் என்று மக்கள் கவலைப்படுகின்றனர்.

இந்நிலையில் பாதுகாப்புத் திணைக்களம் தலையிட்டு இந்த பிரச்சினையைத் தீர்க்க வேண்டும் என்று குடியிருப்பாளர்கள் விரும்புகின்றனர்.

இது தொடர்பில் பாதுகாப்புத் திணைக்களம் (DOC) கூறுகையில், மார்ச் மாதம் ஒரு நபர் காட்டுப்பன்றியால் தாக்கப்பட்டதில் இருந்து எந்தவொரு புகாரும் அல்லது சமூக பாதுகாப்பிற்கான கோரிக்கைகளும் தமக்கு கிடைக்கவில்லை என தெரிவித்துள்ளது.

மேலும் காட்டுப் பன்றிகள் நியூசிலாந்து முழுவதும் பொது பாதுகாப்பு நிலம் மற்றும் தனியார் நிலம் ஆகிய இரண்டிலும் அதிகளவில் காணப்படுவதாகவும், அவற்றை நிர்வகிப்பது ஒரு தொடர்ச்சியான சவாலாக உள்ளது என்றும் DOC கூறியது.

இந்த ஆண்டின் தொடக்கத்தில் St Bathans இற்கு அருகே ஒரு பொது பாதுகாப்பு நிலத்தில் காட்டு பன்றிகளை கட்டுப்படுத்தியதாக பாதுகாப்புத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

தனியார் நிலத்தில் காட்டு விலங்குகளைக் கட்டுப்படுத்தும் திறனில் DOC மட்டுப்படுத்தப்பட்டிருந்தாலும், அவற்றை கட்டுப்படுத்தும் முயற்சிகளில் நாங்கள் சமூகத்துடன் எப்போதும் இணைந்து ஈடுபட ஆர்வமாக உள்ளோம் அது தெரிவித்துள்ளது.
 
இந்நிலையில் காட்டுப் பன்றிகள் ஆபத்தானவை என்பதால் அவற்றை அணுக வேண்டாம் என்று மக்களுக்கு அறிவுறுத்தப்படுகிறது.