ஜப்பானில் உள்ள ஒரு சிறிய நகரத்தில் கடந்த 12 மாதங்களில் மட்டும் 450 அடையாளம் தெரியாத பறக்கும் தட்டுகள் (UFO) பதிவாகியுள்ளதாக கூறப்படுகிறது.

இந்த குட்டி இடம் தான் UFO களின் மையாக இருக்கிறது.

ஃபுகுஷிமாவில் உள்ள இந்த ஊரில் மொத்தம் 5,000 பேர் மட்டுமே வசிக்கின்றனர். ஆனால், அங்கே பல நூறு யுஎப்ஓக்களின் நடமாட்டம் பதிவாகியுள்ளது.

இதனால் அந்த ஊர் மக்கள் நகரையே ஏலியன்களின் தீம்களில் மாற்ற முடிவு செய்து அதன்படி, நகர் முழுக்க ஏலியன்கள், யுஎப்ஓக்களின் பாகங்கள் போன்ற சிலைகளை அமைத்துள்ளனர்.

இதை ஜப்பான் நாட்டின் முதல் யுஎப்ஒ ஆய்வகம் என்றும் அங்குள்ளவர்கள் குறிப்பிடுகின்றனர்.

2020 இல் லினோ-மச்சி என்ற இடத்தில் அவர்கள் இந்த ஆய்வகத்தை அமைத்துள்ளனர். இந்த லினோ-மச்சி நகரில் தான் ஒவ்வொரு ஆண்டும் பல நூறு யுஎப்ஓக்கள் பதிவாகிறது.

பலரும் இந்த நகரைப் பூமியில் இருக்கும் ஏலியன்களின் 'ஹாட்ஸ்பாட்' என்றும் குறிப்பிடுகின்றனர்.

இதற்காக இந்த நகரில் யுஎப்ஓக்கள், ஏலியன்களின் நினைவுச் சின்னங்கள் அவ்வளவு ஏன் கோபுரம் கூட இருக்கிறதாம்.

ஒரு புறம் ஏலியன் ஆய்வுகள் என்றால் மறுபுறம் இதைச் சுற்றுலா மையமாகவும் மாற்றுகிறது ஜப்பான்.