Taupō வில் கார் ஒன்று சாலையை விட்டு விலகி கட்டிடம் மீது மோதுண்டு ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இந்த விபத்து இன்று அதிகாலை Mere வீதியில் இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இதனையடுத்து அவசர சேவைகள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தன.

இந்நிலையில் காரில் பயணம் செய்தவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார் என பொலிஸார் உறுதிப்படுத்தினர்.