நாட்டின் பல பகுதிகளுக்கு கடுமையான வானிலை எச்சரிக்கைகள் தொடர்ந்தும் இருப்பதால், Taranaki இல் நீரோடைகள் மற்றும் ஆறுகளில் நீர்மட்டம் உயர்ந்து வருகின்றன மற்றும் பிராந்தியத்தின் வடக்கில் வெள்ளம் பதிவாகியுள்ளது.

கவுன்சில் ஊழியர்கள் வடிகால்களை சுத்தம் செய்து வருவதாகவும், பிராந்தியத்தின் மத்திய மற்றும் தெற்கு பகுதிகளில் நிலைமையை தொடர்ந்து மதிப்பிடுவதாகவும் Taranaki சிவில் டிஃபென்ஸ் கூறினார்.

வடக்கு Taranaki இல் சொத்து சேதங்கள் மற்றும்  வெள்ளம் பற்றிய ஒரு அறிக்கை உள்ளது என அது கூறியது.

Northland, ஆக்லாந்தின் மேற்குப் பகுதிகள் மற்றும் Waikato, Waitomo, Taranaki, Taumarunui, Taihape மற்றும் வடக்கு Whanganui, Horowhenua முதல் Wellington, Marlborough, Nelson, Tasman, Westland மற்றும் Fiordland பகுதிகளுக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையில் இன்று நள்ளிரவு முதல் Nelson - Marlborough பகுதியில் பலத்த மழை பெய்யக்கூடும் என கூறப்பட்டுள்ளது.

Cape Reinga வில் 120மிமீ பதிவாகியுள்ளது, இன்று அதிகாலையில் Mt Taranaki இல் 150மிமீ மழை வீழ்ச்சி பதிவாகியிருந்ததாக முன்னறிவிப்பாளர் அலிஸ்டர் கோர்மன் தெரிவித்தார்.

Porirua, Stratford மற்றும் Marlborough ஆகிய இடங்கள் கனமழை பெய்ததுடன், Taranaki, Marlborough மற்றும் Kāpiti‌ ஆகிய இடங்களில் காலை நேரத்தில் தொடர்ந்து மழை பெய்யக்கூடும் எனவும் கூறப்பட்டது.

இதனிடையே Mt Taranaki ஐ சுற்றி 300மிமீ வரை மழை பெய்யும் என்று MetService கூறியது. மற்றும் குடிமைத் தற்காப்புப் பிரிவினர் வெள்ளம் ஏற்படும் பகுதிகளில் உள்ள மக்கள் தேவைப்பட்டால் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறத் தயாராக இருக்குமாறு எச்சரித்துள்ளனர்.

சாலைகளில் ஏற்படும் மண்சரிவுகள் மற்றும் வெள்ளம் குறித்து ஓட்டுநர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் எனவும் அது தெரிவித்துள்ளது.