ஊடகவியலாளராக இருந்து அரசியலில் குதித்தவர் விக்ரமன். இவர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டு இரண்டாம் இடத்தை பிடித்தார்.

விசிக கட்சியை சேர்ந்த விக்ரமன் வெற்றிப் பெற வேண்டும் அவருக்கு ஓட்டுப் போடுங்க என கடைசி நேரத்தில் அக்கட்சியின் தலைவரான திருமாவளவன் போட்ட ட்வீட் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

இந்நிலையில் பெண் வழக்கறிஞர் ஒருவர், விக்ரமன் கல்யாணம் செய்துக் கொள்வதாக தன்னுடன் பழகி தனது பணத்தை எல்லாம் ஏமாற்றி மோசடி செய்து விட்டார் என்றும் சாதிய ரீதியாகவும் அவமானப்படுத்தி விட்டார் எனவும் விசிக தலைவரிடம் புகார் அளித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக பிக் பாஸ் விக்ரமனிடம் விசாரிக்க விடுதலை சிறுத்தைகள் கட்சி 5 பேர் கொண்ட விசாரணைக் குழு ஒன்றை அமைத்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

அதில், அந்த கட்சியை சேராத 3 பெண் உறுப்பினர்களும் மேலும் 2 பேரும் சேர்ந்து விசாரணை நடத்த உள்ளதாக கூறுகின்றனர்.

பாதிக்கப்பட்ட அந்த பெண் வழக்கறிஞர் விக்ரமனுக்கு எதிரான ஆதாரங்களையும் அந்த குழுவில் சமர்பித்திருப்பதாகவும் இந்த விசாரணை முடிவில் விக்ரமனுக்கு மிகப்பெரிய இழப்பு ஏற்படலாம் என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

நீதி கிடைக்கும் வரை போராடுவேன் என பாதிக்கப்பட்ட அந்த பெண் வழக்கறிஞர் உறுதியாக உள்ள நிலையில், இதை அறிந்த பிக் பாஸ் ரசிகர்கள் விக்ரமனை சமூக வலைதளங்களில் விளாசி வருகின்றனர்.