சீனாவில் பல ஆண்டுகாலமாகவே மக்கள் தொகை வளர்ச்சியானது கணிசமாக குறைந்துள்ளது.

சீன மக்கள் தொகையில் 60 வயதிற்கும் மேற்பட்டோர் 30 சதவீதத்திற்கும் அதிகமாக உள்ளனர். இந்த நிலை தொடர்ந்தால் சீனாவில் 2035ஆம் ஆண்டில் வயதானவர்கள் மட்டும் அதிகளவில் இருப்பார்கள் என கணிக்கப்பட்டுள்ளது.

இதனால் சீனாவில் குழந்தை பிறப்பு விகிதத்தை அதிகரிக்க பல்வேறு திட்டங்களை அந்நாட்டு அரசு மேற்கொண்டு வருகிறது.

3 குழந்தைகளை கொண்ட குடும்பங்கள் வீட்டு கடனுக்கு விண்ணப்பிக்கும் போது அதிகபட்ச வரம்பை விட 20 சதவீதம் அதிகமாக கடன் வாங்க முடியும் என அறிவித்துள்ளது.

மேலும் மகப்பேறு விடுப்புக்கான ஊதியம், புதுமண தம்பதிகளுக்கு ஊதியத்துடன் கூடிய 30 நாள் விடுப்பு உள்ளிட்ட சலுகைகள் வழங்கப்பட்டுள்ளன.

அது போல் இளைஞர்கள் காதலிக்க நேரம் ஒதுக்கும் வகையில் கல்லூரிகள் விடுமுறையை அறிவித்துள்ளன

இந்த சூழலில் மேலும் ஒரு அறிவிப்பை சீன அரசு அறிவித்துள்ளது. அதன்படி இனி கல்யாணம் ஆகாத தனிப் பெண்களும் செயற்கை கருவுற்றல் மூலம் குழந்தை பெற்றுக் கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

திருமணம் வேண்டாம் ஆனால் குழந்தை வேண்டும் என்று ஆசைப்படும் பெண்கள் பயனடைய வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

திருமணம் ஆகாத பெண்கள், ஊதியத்துடன் மகப்பேறு விடுப்பை எடுத்துக் கொண்டு செயற்கை கருவுற்றல் மூலம் குழந்தை பெற்றுக் கொள்ளலாம். அதேபோல் வாடகை தாய் மூலமும் விருப்பமுள்ள தனிப்பெண்கள் குழந்தைகள் பெற்றுக் கொடுக்கலாம். அவர்களுக்கும் ஊதியத்துடன் கூடிய மகப்பேறு விடுமுறை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் செயற்கை கருவூட்டல் மையங்களின் தேவை அதிகரித்துள்ளதாக ஆசியா பசிபிக் தொழில் மேம்பாட்டு தலைவர் வே லிப்பன்ஸ் தெரிவித்துள்ளார்.

மற்ற நாடுகளுடன் எல்லைத் தாண்டி வரும் சீனா, தற்போது தனது சொந்த எல்லையில் திருமணமே இல்லாமல் குழந்தை பெற்றுக் கொள்ளுதல், காதலிக்க விடுமுறை உள்ளிட்ட எல்லையை மீறிய சலுகைகளை வழங்கி வருகிறது.